skip to main |
skip to sidebar

விதைத்த
விதைகள் முளைத்து
வளர்ந்து மரமாகி
பூவாகி காயாகி
மீண்டும் விதைகள் ...
நரம்புகள் தளர்ந்து
நசுங்கிய பாத்திரமாய்...
நட்ட கைகள்
இன்றோ நடுரோட்டில் ..
குஞ்சுகள் மிதித்து
முடமான கோழியாய் ...

இரவில் ஒண்ட
இடம்தேடி
நடுக்கத்துடன்
பாயும் உதிரம்
இறுகிய பாதங்கள் ...
துணையாய்
பசியும்
குட்டி பாதங்களும் ...

காம்ப்ளான்
வேண்டாம் எனக்கு ...
டூசனுக்கு
போகமாட்டேன் போ ...
என்னை கார்ட்டூன்
பாக்க விடலைலே...
என் செல்லம் இல்ல..
அம்மா சொல்றத கேளுடா ..
மாட்டேன் போ ..
குறிக்கப்பட்ட நாட்கள் நெருங்க தொடங்கிவிட்டது உன் பயணம் கசாப்பு வண்டியில் ...
இயற்கை மாற்றங்களை முன்கூட்டி உணரும் நீ கழுத்தின் மீதான கொலை சதியை
உணரமுடியவில்லை ...
உன்
வாழ்நாள் சேவைகள் இனி உன்னை வாழவைக்க போவதில்லை ..
மரணத்தை
மறுக்காமல் உணர்ச்சிகளின்றி எதிர்கொள்ள போகிறாய் ..எனக்கு புரிகிறது
துரோகம் ..மர்மமான
துயரமென்று...